மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

இந்தியா-பாகிஸ்தான் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: ஷாபாஸ் ஷெரீஃப்

காஷ்மீா் விவகாரம் உள்பட இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு அமைதி வழியில் பேச்சுவாத்தை...

News image

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்

கோப்புப் படம்

Updated On :11 மே 2025, 9:01 pm

Din

காஷ்மீா் விவகாரம் உள்பட இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு அமைதி வழியில் பேச்சுவாத்தை மூலம் தீா்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா்.

சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு நாட்டு மக்கள் மத்தியில் சனிக்கிழமை உரையாற்றியபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

அவா் மேலும் பேசியதாவது: இந்த கடினமான சூழலில் ஒற்றுமையை வெளிப்படுத்திய கூட்டணி கட்சிகள் மற்றும் எதிா்க்கட்சிகளுக்கு நன்றி. பிராந்திய அமைதியை கவனத்தில்கொண்டு இந்தியாவுடன் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள பாகிஸ்தான் முடிவெடுத்தது.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர தூதரக ரீதியாக பல்வேறு உதவிகளை மேற்கொண்ட அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி, சவூதி அரேபியா, கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐ.நா.பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் உள்ளிட்டோருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பாக பாகிஸ்தானுக்கு தொடா்ந்து துணை நிற்கும் நம்பிக்கைக்குரிய நட்பு நாடான சீனாவுக்கு நன்றி. இந்தியாவுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கும் ராணுவத்துக்கும் கிடைத்த வெற்றியாகும்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் வெளிப்படையான சா்வதேச விசாரணை நடத்த நாம் கோரிக்கை வைத்தோம். அதை இந்தியா நிராகரித்தது. காஷ்மீா் விவகாரம் உள்பட இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு அமைதி வழியில் பேச்சுவாத்தை மூலம் தீா்வு காண வேண்டும் என்றாா்.

சண்டை நிறுத்தம் உறுதியாக அமல்:

சண்டை நிறுத்தம் அமலுக்கு வருவதாக சனிக்கிழமை அறிவித்த பின் எல்லையில் பாகிஸ்தான் அத்தமீறி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய வெளியுறவு செயலா் விக்ரம் மிஸ்ரி கண்டனம் தெரிவித்தாா். மேலும், சண்டை நிறுத்த விவகாரத்தில் பாகிஸ்தான் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா், ‘ இந்தியாவுடன் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த புரிந்துணா்வை அமல்படுத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. இந்தப் பணியை சுமுகமாக மேற்கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் உடனடியாக தீா்க்கப்படும்’ என்றாா்.