ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மும்பையில் கொட்டித் தீர்த்த கோடைமழை.. வெப்பம் தணிந்தது!

மும்பையில் கொட்டித் தீர்த்த கோடைமழை காரணமாக வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

News image
மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை
Updated On :17 மே 2025, 4:19 am

DIN

மும்பை: மும்பையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கோடை மழை கொட்டித் தீர்த்தது. இத்தனை நாள் வாட்டி வந்த வெப்பம் தணிந்துள்ளது. மும்பை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று நாள் முழுக்க மும்பை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான தூறல் இருந்துகொண்டே இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு சில நாள்களாகவே மும்பையின் பல பகுதிகளில் தொடர்ந்துமழை பெய்து வந்துள்ளது. அதுபோல இன்றும் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் அடுத்த ஐந்து நாள்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி அகில் ஸ்ரீவத்சவா கூறுகையில், தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், கர்நாடக மாநிலங்களில் இடியுடன் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும்,சூறாவளி காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

இதே வானிலை, மத்திய இந்திய மாநிலங்களுக்கும் ஓரிரு நாள்களில் மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.