ரூ.1 லட்சம் வரையிலான தள்ளுபடி விலையில் ரெனால்ட் கார்கள்!

ரூ.1 லட்சம் வரையிலான தள்ளுபடி விலையில் ரெனால்ட் கார்களைப் பற்றி..
ரூ.1 லட்சம் வரையிலான தள்ளுபடி விலையில் ரெனால்ட் கார்கள்!
Published on
Updated on
1 min read

ரெனால்ட் நிறுவனம் மே மாதத்திற்கான சலுகைகள் மற்றும் தள்ளுபடி விலை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

பிரான்ஸை சேர்ந்த கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ரெனால்ட் தற்போது விற்பனை அதிகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. அதன்படி, மே மாதத்திற்கான சலுகை மற்றும் தள்ளுபடி விலையை ரூ.1 லட்சம்வரை உயர்த்தியுள்ளது.

அதன்படி, கிவிட், டிரைபர், கிகெர் ஆகிய கார்களுக்கு இந்த சலுகை விலை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் தயாரிக்கப்பட்ட கார்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

சலுகை மற்றும் தள்ளுபடி குறித்த விவரங்கள் டீலர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. இந்த விலை ஒவ்வொரு நகரத்துக்கும் மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரெனால்ட் கிவிட் - Renault Kwid

1 லிட்டர் 3 சிலிண்டர் என்ஜினுடன் 67 பிஹெச்பி, 91nm விசை வெளியிடக் கூடிய இந்த கிவிட் மாடலுக்கு ரூ. 1 லட்சம் வரை சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில், ரூ.50,000 ரொக்கமாக தள்ளுபடியும், ரூ.50,000 எக்சேஞ்ச் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இது 2024 மாடல்களுக்கான தள்ளுபடி மட்டுமே.

2025 ஆம் ஆண்டுக்கான மாடல்களில் ரொக்கமாக ரூ.10,000 தள்ளுபடியும், எக்ஸேஞ்சில் ரூ.25,000 என ரூ.35,000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த கிவிட் காரின் தற்போதைய விலை ரூ.4.70 லட்சம் முதல் ரூ.6.45 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் டிரைபர் - Renault Triber

இந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான கார்களுக்கும் ரூ.50,000 ரொக்கமாக தள்ளுபடியும், ரூ.50,000 எக்ஸேஞ்ச் தள்ளுபடியும் என ரூ. 1 லட்சமும், 2025 ஆம் ஆண்டு கார்களுக்கு ரூ.25,000 ரொக்கமாக தள்ளுபடியும், ரூ.35,000 எக்ஸேஞ்ச் போனஸ் என ரூ.60,000 தள்ளுபடி கிடைக்கிறது. 7 பேர் அமரும் வகையில் இருக்கைகள் கொண்ட டிரைபர் காரின் ஸோரூம் விலை ரூ.6.15 லட்சம் முதல் ஆரம்பமாகிறது.

ரெனால்ட் கிகெர் - Renault Kiger

எக்ஸ் ஸோரூம் விலை ரூ.6.15 லட்சத்தில் தொடங்கும் கிகெர் காரின் பழைய மாடலுக்கு ரூ.1 லட்சமும், புதிய மாடல் காருக்கு ரூ.60,000 வரையும் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: ஜூன் 3-ல் அறிமுகமாகும் டாடா ஹாரியர் இவி! என்னென்ன எதிர்பார்க்கலாம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com