தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

நான் சிப்ஸ் பாக்கெட் திருடவில்லை.. 13 வயது சிறுவனின் தற்கொலை கடிதம்

நான் சிப்ஸ் பாக்கெட் திருடவில்லை என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு 13 வயது சிறுவன் தற்கொலை

News image

தற்கொலைக் கடிதம்

Updated On :23 மே 2025, 1:25 pm IST

பன்ஸ்குரா: மேற்கு வங்க மாநிலம் பன்ஸ்குரா பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவர், அம்மா நான் சிப்ஸ் பாக்கெட்டை திருடவில்லை என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பகுல்தா உயர்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்புப் படித்து வந்த கிருஷ்னெண்டு (13), அங்கிருந்த ஒரு இனிப்பகத்தில் மூன்று சிப்ஸ் பாக்கெட்டுகளை திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடையில் ஆள் இல்லாதபோது சிப்ஸ் பாக்கெட்டுகளை சிறுவன் திருடிச் சென்றதாக, கடையின் உரிமையாளர் குற்றம்சாட்டி, சிறுவனைப் பிடித்து வந்து ரூ.20 பெற்றுக் கொண்டுள்ளார். மக்கள் முன்னிலையில் சிப்ஸ் பாக்கெட் திருட மாட்டேன் என்று கூறி மன்னிப்புக் கேட்குமாறு வலியுறுத்தியிருக்கிறார். கடையிலிருந்து சிறுவனை அழைத்துச் சென்ற அவரது தாய், வீட்டுக்குச் சென்று கடுமையாக திட்டியிருக்கிறார்.

இதையடுத்து வீட்டில் ஆள் இல்லாதபோது கிருஷ்ணென்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடைக்காரர், சிறுவனை திருடன் என்று குற்றம்சாட்டியதே தற்கொலைக்குக் காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காவல்துறையினருக்கு இதுவரை குடும்பத்தினர் புகார் எதுவும் கொடுக்காத நிலையில், கடைக்காரர் தலைமறைவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை செய்துகொண்ட சிறுவன், கடைசியாக எழுதியக் கடிதத்தில், அம்மா நான் சிப்ஸ் பாக்கெட்டுகளை திருடவில்லை என்று எழுதியிருப்பது, பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.