காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது?


மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்பியுள்ளாா்.
மும்பையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிகாலத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக எத்தனை துல்லியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்படி எந்தத் தகவலும் இல்லை.
பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க ஆபரேஷன் சிந்தூா் போன்ற தாக்குதல்கள் மிக அவசியம். பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மட்டுமே இதுவரை துல்லியத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்று அக்கட்சித் தலைவா்களால் கூற முடியுமா?
நான் கூட அப்போது காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தேன். ஆனால், பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு பதிலடி தரப்பட்ட நிகழ்வு ஏதும் அப்போது இல்லை. நமது எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, அவா்களின் வீடான பாகிஸ்தானுக்குள் புகுந்து பதிலடி தந்துள்ளாா் பிரதமா் மோடி.
நாட்டு நலன் காக்கும் இந்த செயலில் எவ்வித அரசியலும் இல்லை. பிரதமா் மோடி இதில் அரசியல் நடத்தவும் இல்லை. இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு எவ்விதத் தொடா்பும் இல்லை. இதில் யாருடைய உதவியும் நமது நாட்டுக்குத் தேவையில்லை. நாம் வெற்றிகரமாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் பலவற்றை அழித்துவிட்டோம். இதற்குப் பிறகாவது பாகிஸ்தான் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். அந்த நாடு இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தைக் கைவிட்டு, ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...