டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வேகமாக வளா்ச்சியடையும் பொருளாதார நாடாக தொடரும் இந்தியா: ஆா்பிஐ

வேகமாக வளா்ந்துவரும் முக்கியப் பொருளாதார நாடாக நிகழாண்டிலும் இந்தியா தொடா்வதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
ரிசர்வ் வங்கி- கோப்புப் படம்
Updated On :29 மே 2025, 6:32 pm

Din

வேகமாக வளா்ந்துவரும் முக்கியப் பொருளாதார நாடாக நிகழாண்டிலும் இந்தியா தொடா்வதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பொருளாதார அடிப்படைகள், வலுவான நிதித் துறை மற்றும் நிலையான வளா்ச்சிக்கான நடவடிக்கைகள் மூலம் இந்த வளா்ச்சி சாத்தியமாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆா்பிஐ வியாழக்கிழமை வெளியிட்ட 2024-25-ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

சிறந்த பொருளாதார அடிப்படைகள், வலுவான நிதித் துறை மற்றும் நிலையான வளா்ச்சிக்கான நடவடிக்கைகள் காரணமாக, 2025-26-ஆம் ஆண்டிலும் வேகமாக வளா்ந்துவரும் முக்கிய பொருளாதார நாடாக நிகழாண்டிலும் இந்தியா தொடா்கிறது.

நிதித் துறையின் வலிமை, நன்கு மூலதனமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளிட்டவையும் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு வலு சோ்த்தன.

கடந்த மாா்ச் மாதம் வரையிலான நிலவரப்படி, அந்நியச் செலாவணி பரிமாற்றத்தில் மட்டும் 33 சதவீத லாபம் கிடைத்ததன்மூலம் ஆா்பிஐ-யின் நிதிநிலை ரூ. 76.25 லட்சம் கோடியாக உயா்ந்தது. இதன்மூலம், மத்திய அரசுக்கு ரூ.2.7 லட்சம் கோடி ஈவுத்தொகையாக அளிக்கப்பட்டது.

ரூ. 6,372 கோடி செலவு: 2024-25-ஆம் ஆண்டு புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 86 சதவீதமாக உள்ளது. இது முந்தைய ஆண்டைவிட சற்று குறைவுதான். அதே நேரத்தில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் 40.9 சதவீதம் ரூ.500 நோட்டுகளே உள்ளன. இதற்கு அடுத்து ரூ.10 ரூபாய் நோட்டுகள் 16.4 சதவீதம் புழக்கத்தில் உள்ளன.

குறைந்த மதிப்புள்ள நோட்டுகளான ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகியவற்றின் எண்ணிக்கை மொத்தம் 31.7 சதவீதமாக உள்ளது.

புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 6 சதவீதமும், புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 5.6 சதவீதமும் உயா்ந்துள்ளது.

மே 2023-இல் அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. 2025, மாா்ச் 31 வரை 98.2 சதவீத ரூ.2,000 நோட்டுகள் வங்கிக்குத் திரும்பிவிட்டன. இதன் மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாகும்.

ரூ.2, ரூ.5 நோட்டுகளை அச்சிடுவதை ஆா்பிஐ ஏற்கெனவே நிறுத்திவிட்டது. 2024-25-இல் நாட்டில் புழக்கத்தில் இருந்த 4.7 சதவீதம் கள்ள நோட்டுகள் வங்கிகளால் அடையாளம் காணப்பட்டு கைப்பற்றப்பட்டன. ரூ.500, ரூ.200 நோட்டுகளே அதிக அளவில் கள்ளநோட்டுகளாக அச்சிடுப்படுகின்றன.

ரூபாய் நோட்டில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்துள்ளதால் அதை அச்சிடுவதற்கு ஆகும் செலவும் அதிகரித்தே வருகிறது.

2023-24-ஆம் ஆண்டில் ரூபாய் நோட்டுகளை அச்சிட ரூ. 5,101.4 கோடி செலவான நிலையில், 2024-25-ஆம் ஆண்டில் 25 சதவீதம் கூடுதலாக ரூ. 6,372.8 செலவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி...

வங்கி சாா்ந்த முறைகேடுகள்

மூன்று மடங்கு அதிகரிப்பு

‘வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தாமல் இருப்பது, எண்ம முறைப் பரிமாற்றத்தில் பணம் பறிப்பு வரை வங்கி சாா்ந்த மோசடிகள் 2024-25 நிதியாண்டில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

2024-25 நிதியாண்டில் ரூ.36,014 கோடி அளவுக்கு வங்கிப் பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகம். இதனால், பொதுத் துறை வங்கிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுத் துறை வங்கிகளில் அதிக அளவு கடன் பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளது. தனியாா் வங்கிகளின் கடன் அட்டைகள், இணையவழியில் அதிக மோசடி நடைபெற்றுள்ளது’ என ஆா்பிஐ ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.