தங்கள் வங்கியின் ஏடிஎம் கார்டு மூலம், ஒரு நாளைக்கு ஏடிஎம் மையத்தில் பணமெடுக்கும் அளவில் பஞ்சாப் தேசிய வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பஞ்சாப் தேசிய வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கும் ஏடிஎம் கார்டுகளின் வகைகளுக்கு ஏற்ப, நாள் ஒன்றுக்கு பணமெடுப்பதில் புதிய கட்டுப்பாடுகளை உருவாக்கியருக்கிறது.
இதன் மூலம், வாடிக்கையாளரின் பணப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும், டிஜிட்டல் பணப்பரிமாற்ற வசதிகளை மேம்படுத்த உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பஞ்சாப் தேசிய வங்கியின் ரூபே என்சிஎம்சி பிளாட்டினம் உள்ளிட்ட வகை ஏடிஎம் கார்டுகளை வைத்திருப்பவர்கள் இதுவரை ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரை ஏடிஎம் மூலம் பணமெடுக்கலாம் என்று வரைமுறை, இனி ரூ.50 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அது போல, ரூபேயின் சில டெபிட் கார்டுகள், நியோ, எக்ஸெல், விசா சிக்னேச்சர், மாஸ்டர்கார்டு வணிக கார்டுகள் போன்றவற்றின் மூலம் இதுவரை நாள் ஒன்றுக்கு ரூ.1.50 லட்சம் வரை பணமெடுக்கலாம் என்ற உச்ச அளவு, தற்போது ரூ.75 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர வேறு சில ஏடிஎம் வகைகளின் பணமெடுக்கும் உச்ச வரம்பு மாற்றமில்லாமல் நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள், தங்களது ஏடிஎம் அட்டையின் வகையை அறிந்து, அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










