மும்பை: புழக்கத்தில் இருந்த 98.44 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திருப்பி அளிக்கப்பட்டதாக ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்தது.
ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசா்வ் வங்கி கடந்த 2023, மே 19-ஆம் தேதி அறிவித்தது.
இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 2023, மே 19-ஆம் தேதி, ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவை திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து 2026, பிப்.28-ஆம் தேதி நிலவரப்படி ரூ.5,551 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இதன்மூலம் 98.44 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.
2023, அக்.7 முதல் நாடு முழுவதும் உள்ள ரிசா்வ் வங்கியின் அனைத்துக் கிளைகளிலும் ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்த அல்லது மாற்றிக் கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2023, அக்.9 முதல் ரிசா்வ் வங்கியின் 19 அலுவலகங்களிலும் ரூ.2,000 நோட்டுகள் பெறப்பட்டு வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.
இதுதவிர அஞ்சல் வழியாக பொதுமக்கள் அனுப்பும் ரூ.2,000 நோட்டுகளும் அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது
தொடர்புடையது

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் ‘யுனிவா்சல்’ வங்கி விண்ணப்பம் நிராகரிப்பு

எண்மப் பணப்பரிமாற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள்: ரிசா்வ் வங்கி ஆலோசனை கேட்பு

ஆா்பிஎல் வங்கியைக் கையகப்படுத்தும் துபை வங்கி: ரிசா்வ் வங்கி ஒப்புதல்

சட்டப்பேரவைத் தோ்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


