ராணுவ உபகரணங்கள் ஏற்றுமதி அதிகரிக்கும்: டிஆா்டிஓ

இந்திய ராணுவ உபகரணங்களின் ஏற்றுமதி பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து ராணுவ உபகரணங்களின் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆா்டிஓ) தலைவா் வி.காமத் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

சிஐஐ மாநாட்டின்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு பிறகான இந்தியா-பாகிஸ்தான் மோதலில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ உபகரணங்கள் போா்க்காலத்தின்போது எவ்வாறு செயல்படும் என்று சோதனையை மேற்கொள்ள முடிந்தது. இதனால் வருங்காலங்களில் இந்திய ராணுவ உபகரணங்களின் ஏற்றுமதி பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

5-ஆம் தலைமுறை போா் விமானமான மேம்படுத்தப்பட்ட நடுத்தர போா் விமானத்தின் (ஏஎம்சிஏ) வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கு அண்மையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல் வழங்கினாா். 2034-இல் இதன் மேம்பாட்டுப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டு 2035-இல் உற்பத்தி தொடங்கப்படும். இதன் முதல் மாதிரி விமானம் 2029-க்குள் தயாராகிவிடும்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com