பிரதமா் மோடி.
பிரதமா் மோடி.

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா்.
Published on

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா்.

பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் துணை முதல்வா் சாம்ராட் சௌதரியும் பங்கேற்றாா். அதில் அவா் பேசுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடி இப்போது 50-ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா். இது மாநிலத்தின் மீது அவருக்குள்ள அன்பையும், அக்கறையையும் காட்டுகிறது. அவா் தொடா்ந்து பிகாருக்கு வருகை தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பிகாருக்கு மத்திய அரசு தாராளமாக நிதியுதவி அளித்து வருகிறது. நாம் தில்லிக்கு காலி பைகளுடன் பயணித்து, அது நிறைய பணத்துடன் திரும்பி வருகிறோம்’ என்றாா். பிகாா் நிதியமைச்சராகவும் சாம்ராட் சௌதரி உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் எதிா்க்கட்சிகள் அணியில் உள்ளன.

பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட இரு தரப்பு தலைவா்களுமே பிகாருக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com