பாக்கு மட்டை பொருள்களுக்கு அமெரிக்கா தடை! முன்னணி ஏற்றுமதி நாடான இந்தியா பாதிப்பு!

பாக்கு மட்டை பொருள்களுக்கு அமெரிக்க அரசின் தடையால், இந்தியாவில் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படுகிறது.
பாக்கு மட்டை பொருள்களுக்கு அமெரிக்கா தடை! முன்னணி ஏற்றுமதி நாடான இந்தியா பாதிப்பு!
Published on
Updated on
1 min read

பாக்கு மட்டைத் தட்டுகளுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால், இந்தியாவில் பாக்கு மட்டைத் தட்டு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படுகிறது.

பாக்கு மட்டைத் தட்டுகள் சந்தையானது, உலகளவில் ஆண்டுதோறும் ரூ. 3,500 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் பங்களிப்பு மட்டும் ரூ. 2,500 கோடியாகும். இந்தியாதான், உலகின் மிகப்பெரிய `பாக்கு தட்டுகளை’ ஏற்றுமதி செய்யும் நாடாகும்.

பிளாஸ்டிக் தட்டு, டம்ளர் ஆகிய பொருள்களுக்கு மாற்றாக பாக்கு மட்டைத் தட்டுகள், கோப்பைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இந்தத் தயாரிப்புகள், இந்தியாவில்தான் அதிகளவில் (சுமார் 600 அலகுகள்) உற்பத்தி செய்யப்படுகிறது. அவற்றிலும், தமிழ்நாடு மற்றும் தெற்கு கர்நாடகத்திலிருந்துதான் அதிகம் தயாரிக்கப்படுகின்றன.

இவை, அமெரிக்கா, ஜெர்மனி, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2023, நவம்பர் முதல் 2024, அக்டோபர் வரையில் 325 வாடிக்கையாளர்களுக்கு 144 இந்திய ஏற்றுமதியாளர்கள் 3,407 (பாக்கு மட்டை பொருள்கள்) சரக்குகளை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், பாக்கு மட்டை தட்டுகளில் இயற்கையாக நஞ்சு உருவாவதாகக் கூறி, அப்பொருள்களுக்கு அமெரிக்க அரசு தடை செய்து உத்தரவிட்டது. இதனால், இந்தியாவில் பாக்கு இலை ஏற்றுமதி பெரும் பாதிப்புக்குள்ளாகிறது.

முன்னதாக, ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளும் பாக்கு மட்டை பொருள்களுக்கு தடை விதித்தபோதும், இந்தியா பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com