

4,410 கிலோ செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தும் முயற்சி வெற்றி பெற்றமைக்கு பிரதமர் மோடி பாராட்ட்டியுள்ளார்.
இஸ்ரோவால் 4,410 கிலோ எடையிலான சிஎம்எஸ்- 03 செயற்கைக்கோள் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஞாயிற்றுக்கிழமை மாலை விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு குவிகிறது.
சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசும்போது, எல்விஎம் -3 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. சிஎம்எஸ்-03 அதிக எடையுடைய செயற்கைக்கோள். இதன் பயன்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இன்று அனைத்தும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்றது என்றார்.
இந்த நிலையில், இது குறித்து, பிரதமர் மோடி தமது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நமது வின்வெளித் துறை நம்மை தொடர்ந்து பெருமிதம் கொள்ளச்செய்கிறது! இந்தியாவின் அதிக எடை(4,410 கிலோ) கொண்ட தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ‘சிஎம்எஸ்-03’ வெற்றிகரமாக நிலைநிறுத்தியமைக்காக இஸ்ரோவுக்கு பாராட்டுகள்.
நமது விண்வெளி விஞ்ஞானிகளின் திறனால் நமது விண்வெளித் துறை படைப்பாற்றல் மற்றும் திறம் வாய்ந்து சிறக்கிறது என்பது போற்றுதற்குரியது. அவர்களுடைய வெற்றிகள் தேசிய முன்னேற்றத்தை மேலும் அதிகரித்திருப்பதுடன் எண்ணற்ற உயிர்களுக்கு வலுவூட்டியுள்ளன’ என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.