

பிரதமர் நரேந்திர மோடி 11 ஆண்டுகளாக பதவியில் இருந்தும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
பிகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
''பிரதமர் மோடி காங்கிரஸை பற்றிப் பேசுகிறார், ஆனால் அவர் தனது சொந்த செயல்களை மறந்துவிட்டார்.
பணமதிப்பிழப்பு, கருப்புப் பணம், இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் ஆகியவற்றை அவர் மறந்துவிட்டார். அவர் அளித்த இந்தப் பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.
இப்போது ஒரு கோடி வேலைவாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். நீங்கள் கடந்த 11 ஆண்டுகளாக பிரதமராக இருந்தீர்கள், இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.
பிரதமர் மோடி எப்போதும் பொய் சொல்கிறார். 'பொய்களின் தலைவர் என்று நரேந்திர மோடியை கூறலாம். அதனால்தான் எங்கும் பொய் கூறி வருகிறார்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.