பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

பிரதமர் மோடி 11 ஆண்டுகளாக பதவியில் இருந்தும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை என கார்கே விமர்சனம்.

மல்லிகார்ஜுன கார்கே - படம் - ANI

Published On :3 நவம்பர் 2025, 10:05 pm IST

பிரதமர் நரேந்திர மோடி 11 ஆண்டுகளாக பதவியில் இருந்தும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

பிகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

''பிரதமர் மோடி காங்கிரஸை பற்றிப் பேசுகிறார், ஆனால் அவர் தனது சொந்த செயல்களை மறந்துவிட்டார்.

பணமதிப்பிழப்பு, கருப்புப் பணம், இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் ஆகியவற்றை அவர் மறந்துவிட்டார். அவர் அளித்த இந்தப் பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.

இப்போது ஒரு கோடி வேலைவாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். நீங்கள் கடந்த 11 ஆண்டுகளாக பிரதமராக இருந்தீர்கள், இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.

பிரதமர் மோடி எப்போதும் பொய் சொல்கிறார். 'பொய்களின் தலைவர் என்று நரேந்திர மோடியை கூறலாம். அதனால்தான் எங்கும் பொய் கூறி வருகிறார்'' எனக் குறிப்பிட்டார்.

Summary

not been able to fulfil the promise of two crore jobs Congress Mallikarjun Kharge

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.