தில்லி கார் வெடிப்பு! இந்தியாவுடன் துணை நிற்கிறோம்; இஸ்ரேல் அரசு இரங்கல்!

தில்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு இஸ்ரேல் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது குறித்து...
தில்லி கார் வெடிப்பு
தில்லி கார் வெடிப்புஏபி
Published on
Updated on
1 min read

தில்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு, இஸ்ரேல் அரசு இரங்கல் தெரிவிப்பதாக, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் தெரிவித்துள்ளார்.

தில்லியில், செங்கோட்டையின் அருகில் நேற்று (நவ. 10) இரவு நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவத்தில், ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம், தீவிரவாதச் சதிச் செயலாக இருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், கனடா அரசு தில்லி சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாக இந்தியாவில் உள்ள கனடா உயர் ஆணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், தில்லியில் கார் வெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு இஸ்ரேல் அரசு இரங்கல் தெரிவிப்பதாக, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில்:

“தில்லியில் கார் வெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், இந்திய மக்களுக்கும் இஸ்ரேலின் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன், இஸ்ரேல் துணை நிற்கின்றது” எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வெடிகுண்டு தாக்குதல்! 12 பேர் பலி!

Summary

Israeli Foreign Minister Gideon Sar has expressed his condolences over the car bombing in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com