

தில்லி மற்றும் சீனாவின் குவாங்சோ நகரத்தின் இடையில் நேரடி விமானங்கள் இயக்கப்படுவதாக, இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் தலைநகர் தில்லி மற்றும் சீனாவின் குவாங்சோ நகரத்துக்கும் இடையில் நவ.10 ஆம் தேதி முதல் ஏ 320 விமானங்கள் மூலம் இடைவெளி இல்லாமல், நேரடி விமானங்கள் இயக்கப்ட்டு வருவதாக, இண்டிகோ நிறுவனம், இன்று (நவ. 11) தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மற்றும் தில்லி ஆகிய இரண்டு நகரங்களில் இருந்து சீனாவின் குவாங்சோ நகரத்துக்கு இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுகின்றன.
முன்னதாக, இந்தியா மற்றும் சீனா இடையிலான விமான சேவைகள் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட எல்லைப் பிரச்னைகள் மற்றும் கரோனா பெருந்தொற்றால் நிறுத்தப்பட்டிருந்தன.
இதையடுத்து, சீனா மற்றும் இந்தியா அரசுகளின் உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக, இருநாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகள் சமீபத்தில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மேக்கேதாட்டு அணை தமிழ்நாட்டை பாதிக்காது: கர்நாடக முதல்வர் பேச்சு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.