

தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளில் முன்னிலை பெற்று பிகாரில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. இந்தியா கூட்டணி வெறும் 33 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது.
பிகாரில் பாஜக - நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மாபெரும் வெற்றியை அடைந்து வருகிறது.
இந்நிலையில் தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு பாஜக மூத்த தலைவர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய பாஜக அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
பிரதமர் மோடியும் அங்கு வந்துள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் மத்தியில் பேசவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பிகாரில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.