மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 30 லட்சம் பெயர்கள் நீக்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. இதில், மேற்கு வங்க மாநிலத்தின் வாக்காளர் பட்டியல்களில் இருந்து சுமார் 30 லட்சம் பெயர்கள் நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நீக்கப்படவுள்ள 30 லட்சம் வாக்காளர்களில் சுமார் 16 லட்சம் வாக்காளர்கள் ஏற்கெனவே மரணமடைந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இத்துடன், போலியான வாக்காளர்கள், பிற மாநிலங்களுக்கு நிரந்தரமாகக் குடியேறியவர்கள் மற்றும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுவரை பூர்த்தி செய்யப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட படிவங்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த எண்ணிக்கையானது கூறப்படுவதாகவும், இந்தப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்தவுடன் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் மேற்கு வங்கத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இத்துடன், கடந்த நவ.28 ஆம் தேதி மாலை நிலவரத்தின்படி சுமார் 6.73 கோடி வாக்காளர்களின் படிவங்கள் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது, மேற்கு வங்கத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் 88 சதவிகிதம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, மேற்கு வங்கத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களின் இறுதி எண்ணிக்கை வரும் டிச.9 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கோழிக்கோடு குழந்தைகள் நல மருத்துவமனையில் தீ விபத்து!
Summary
The ECI announced that around 30 lakh names will be removed from the voter list in Bengal through the SIR.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் மூலம் பெயா் நீக்கப்பட்டோரின் ரேஷன் அட்டைகளை ரத்து! மேற்கு வங்க அரசுக்கு ஒவைசி கண்டனம்!

1.6.1976: தானியத்தைச் சேமிக்க பள்ளிக் கட்டடங்களும் பயன்படுத்தப்படலாம்

தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்







