வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

அனைத்து மாநிலங்களுக்கும் ரூ. 1,01,603 கோடி வரி பங்கீட்டுத் தொகையை மத்திய அரசு விடுத்துள்ளது குறித்து...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

அனைத்து மாநிலங்களுக்கும் ரூ. 1,01,603 கோடி வரி பங்கீட்டுத் தொகையை விடுவித்து மத்திய அரசு இன்று (அக். 1) அறிவித்துள்ளது.

இதில், தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு ரூ. 18,227 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக கோவாவிற்கு ரூ. 392 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தையொட்டி முன்கூட்டியே வரிப் பங்கீட்டு தவணை விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆந்திரம் - ரூ. 4112 கோடி

அருணாச்சல் - ரூ. 1785 கோடி

அசாம் - ரூ. 3178 கோடி

பிகார் - ரூ. 10219 கோடி

சத்தீஸ்கர் - ரூ. 3462 கோடி

குஜராத் - ரூ. 3534

ஹரியாணா - ரூ. 1111 கோடி

ஹிமாசல் - ரூ. 843 கோடி

ஜார்க்கண்ட் - ரூ. 3360 கோடி

கர்நாடகம் - ரூ. 3705 கோடி

கேரளம் - ரூ. 3705 கோடி

மத்தியப் பிரதேசம் - ரூ. 7976 கோடி

மகாராஷ்டிரம் - ரூ. 6418 கோடி

மணிப்பூர் - ரூ. 727 கோடி

மேகாலயா - ரூ. 779 கோடி

மிசோரம் - ரூ. 508 கோடி

நாகாலாந்து - ரூ. 578 கோடி

ஒடிஸா - ரூ. 4601 கோடி

பஞ்சாப் - ரூ. 1836 கோடி

ராஜஸ்தான் - ரூ. 6123 கோடி

சிக்கிம் - ரூ. 394 கோடி

தமிழ்நாடு - ரூ. 4144 கோடி

தெலங்கானா - ரூ. 2136 கோடி

திரிபுரா - ரூ. 719 கோடி

உத்தரப் பிரதேசம் - ரூ. 18,227 கோடி

உத்தரகண்ட் - ரூ. 1136 கோடி

மேற்கு வங்கம் - ரூ. 7644 கோடி

இதையும் படிக்க | சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்

Summary

Union Government releases tax devolution

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com