
இந்தியாவில் 15 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் தரவு மையத்தை அமைக்கவிருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில், தனது தரவு மையத்தை அமைக்கவிருப்பதாகக் கூறிய கூகுள் நிறுவனம், இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்யவிருப்பதாகவும் தெரிவித்தது.
அமெரிக்காவுக்கு வெளியே முதன்முறையாக, தனது மிகப்பெரிய அளவிலான ஒரு ஜிகாவாட் திறன்கொண்ட தரவு மையத்தை அமைக்கும் கூகுள், இந்த தரவு மையத்தில் ஏஐ உள்கட்டமைப்பு, பெரியளவிலான எரிசக்தி ஆதாரங்கள் உள்ளிட்டவற்றுடன் அமைக்க திட்டமிட்டிருக்கிறது.
உலகளவில் அனைத்துத் துறைகளிலும் செய்யறிவுப் பயன்பாடு அதிகரித்து வரும்நிலையில், செய்யறிவு குறித்த ஆராய்ச்சியில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களின் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில்தான், இந்தியாவில் தனது தரவு மையத்துக்கான முதலீட்டை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: ரூ.5,000 கோடி வங்கி முதலீடு! உலகின் பணக்கார கிராமம் இருப்பது இந்தியாவில்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.