
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் மகேந்திர ரெட்டி (31, தனது மனைவியும் தோல் மருத்துவருமான கிருத்திகாவை (28) மயக்க ஊசி செலுத்தி கொலை செய்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலில், மரணம் என வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், உடல் கூராய்வு முடிவுகள் வெளியானபோதுதான், மிக பயங்கர கொலைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
முதலில், மரணம் என வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், உடல் கூராய்வு முடிவுகள் வெளியானபோதுதான், மிக பயங்கர கொலைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் தோல் மருத்துவராகப் பணியாற்றி வந்த கிருத்திகா, மரணம் அடைந்த சம்பவம் முதலில் இயற்கைக்கு மாறான மரணம் என பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், அவரது உடல் கூராய்வில், அவருக்கு அதிகப்படியான மயக்க மருந்து அளிக்கப்பட்டதே மரணத்துக்குக் காரணம் என தெரிய வந்தநிலையில், அது கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம்தான் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. குற்றவாளி மகேந்திரா, அங்குள்ள மிகப்பெரிய மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். தற்போது கைது செய்யப்பட்டு 7 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அறுவைசிகிச்சைகளின்போது நோயாளிகளுக்கு வழங்கப்படும் மயக்க மருந்தான ப்ரோபோஃபோல், கிருத்திகா உடலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக உடல் கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி காவல்துறையினர் கூறுகையில், மயக்கமடைந்த நிலையில், கிருத்திகாவை, மகேந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிருத்திகா ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து கிருத்திகாவுக்கு ஏற்கனவே பல உடல் நலப் பிரச்னைகள் இருந்ததால், அவர் இறந்துவிட்டதாகவும், தனது மனைவிக்கு உடல் கூராய்வு செய்யக் கூடாது என்றும் மகேந்திரா காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதையே, கிருத்திகாவின் பெற்றோரிடமும் கூறி, அவர்களையும் காவல்துறைக்கு வேண்டுகோள் வைக்க வலியுறுத்தியிருக்கிறார்.
ஆனால், காவல்துறையினர், கிருத்திகாவின் உடலை உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதில்தான் கிருத்திகா கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், கிருத்திகாவுக்கு இரைப்பைக் குடல் தொடர்பான பிரச்னை இருந்ததாகவும், திருமணத்துக்குப் பிறகு இது தெரிய வந்ததால் மகேந்திரா மனைவி மீதும், நோயை மறைத்துத் திருமணம் செய்து வைத்ததாகக் கூறி அவரது பெற்றோர் மீதும் கோபத்தில் இருந்துள்ளார். இதுதான் கொலைக்குப் பின்னணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கொலையான கிருத்திகாவுக்கு, கணவர் சிகிச்சை அளிப்பதாகக் கூறி மருந்துகளை செலுத்தியிருக்கிறார், இறுதியில் மயக்க மருந்தை அதிகப்படியாக செலுத்திக் கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க.. ஐஆர்சிடிசி முடங்கியது! தீபாவளியால் திணறும் ரயில் டிக்கெட் முன்பதிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.