

தெலங்கானா அரசின் அமைச்சரவையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் காங்கிரஸ் நிர்வாகியுமான முகமது அசாருதீன் சேர்க்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானாவில், கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ஆனால், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் வெற்றி பெற்ற பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் உறுப்பினர் மகாந்தி கோபிநாத் கடந்த ஜூன் மாதம் காலமானார்.
இதையடுத்து, அந்த தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அசாருதீன் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்தார். ஆனால், வரும் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஆளுநரின் ஒதுக்கீட்டின் கீழ் அசாருதீனை சட்டப் பேரவையின் மேலவை உறுப்பினராக நியமிக்கப்போவதாக தெலங்கானா அமைச்சரவை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.
இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் நாளை மறுநாள் (அக்டோபர் 31) தெலங்கானா காங்கிரஸ் அரசின் அமைச்சராகப் பதவியேற்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, தெலங்கானா அமைச்சரவையில் ஒரு இஸ்லாமிய உறுப்பினர் கூட இடம்பெறவில்லை என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், அசாருதீன் அமைச்சராகப் பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டிரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.