

மணிப்பூர் மாநிலத்தில், புதியதாக 129 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
மணிப்பூரில், புதியதாக 129 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்; இதன்மூலம், நிகழாண்டில் (2025) டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 3,594 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூரில் கடந்த ஜனவரி 1 முதல் அக்டோபர் 28 ஆம் தேதி வரை 7,883 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும்; டெங்கு பாதிப்பால் பிஷ்னுப்பூர் மாவட்டத்தில் ஒருவர் பலியானதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிகப்படியாக மேற்கு இம்பால் மாவட்டத்தில் 2,507 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், கிழக்கு இம்பால் - 655, பிஷ்னுப்பூர் - 102, தௌபல் -84, சேனாபதி - 63, காக்சிங் - 45, உக்ருல் - 44 மற்றும் சந்தேலில் - 25 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, மணிப்பூரில் கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 2,463 டெங்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சூர்ய காந்த்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.