

அமெரிக்காவில் இருந்து, சட்டவிரோதமாக குடியேறிய 2,790 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதியின்றி அமெரிக்காவில் குடியேறிய சுமார் 2,790 இந்தியர்கள் மீண்டும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று (அக். 30) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் குடியுரிமை உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் உறுதி செய்யப்பட்ட பின்பு அவர்கள் தாயகம் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், சட்டவிரோதமாக பிரிட்டன் நாட்டில் குடியேறிய சுமார் 100 இந்தியர்களும் நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜனவரி மாதம் முதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இறுதியாக, கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு உரிய ஆவணங்களின்றி குடியேறிய பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஜித் கௌர் (வயது 73) என்ற மூதாட்டி கைது செய்யப்பட்டு மீண்டும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சபரிமலை தங்கக் கவச மோசடி: உன்னிகிருஷ்ணன் போற்றி சிறையில் அடைப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.