

மோந்தா புயலின் பாதிப்பால், ஆந்திரப் பிரதேசத்துக்கு குறைந்தது ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான மோந்தா புயல், கடந்த அக்.28 ஆம் தேதி இரவு ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகில் கரையைக் கடந்தது. இந்தப் புயலால், ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மோந்தா புயலின் பாதிப்புகள் மற்றும் சேதாரங்களை பட்டியலிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அரசுக்கு குறைந்தது ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“மோந்தா புயலால், ஆந்திரத்தின் சாலைகள் மற்றும் கட்டடங்கள் துறைக்கு ரூ. 2,079 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டாக, ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயத் துறைக்கு ரூ.829 கோடியும், மீனவளத் துறைக்கு ரூ.1,270 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்த இழப்புகள் அனைத்தும் பட்டியலிடப்பட்ட முழுமையான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
இதையும் படிக்க: தோழியின் வீட்டில் ரூ. 2 லட்சம், மொபைல் திருடிய பெண் ஆய்வாளர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.