
உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்த நவராத்திரி - தீபாவளி போன்ற விழாக்காலங்கள் வரை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுதேசி மேளா நடத்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அந்தந்தத் தொகுதிகளில் 20 - 30 வணிகர்கள் மற்றும் கடைக்காரர்களை ஒருங்கிணைத்து ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு எம்.பி.யும் தங்கள் தொகுதியில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் சுதேசி பயன்பாட்டை வலியுறுத்தும் விதமாக கண்காட்சி நடத்த வேண்டும் என்றும் நமது பாரம்பரியம் என்ற கருப்பொருளை பறைசாற்றும் விதமாக அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
உள்நாட்டுப் பொருள்களை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்துவதன் மூலம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி அடையும் எனக் குறிப்பிட்டார்.
இந்திய இறக்குமதி பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. அதிக வரி விதிப்பால், இந்திய உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகும் உருவாகியுள்ளது.
இதனைத் தவிர்க்கும் சூழலில் உள்நாட்டுத் தயாரிப்புகளை மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சுதேசி பயன்பாட்டை பிரதமர் மோடி ஊக்குவித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, பண்டிகை நாள்களையொட்டி அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எம்.பி.க்களுக்கு இன்று அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மீதும் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால், அதனால் ஏற்படும் சாதகங்கள் குறித்தும் வணிகர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க | ஹிமாசல், பஞ்சாப் வெள்ளம்: நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.