
தேடுபொறி தளமான கூகுள் தன்னுடைய செய்யறிவு பயன்பாட்டில் இந்தியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த ஏஐ மோட், ஜெமினி 2.5 என்ற இயங்குதளத்தால் இயக்கப்படுகிறது.
கூகுள் தேடுபொறி இணையதளம், முதலில் கடந்த மார்ச் மாதம் ஆங்கிலத்தில் ஏஐ மோடு பயன்பாட்டை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் தற்போது மேலும் 5 மொழிகளில் செய்யறிவு மோடு அறிமுகமாகியிருக்கிறது. மார்ச் மாதம் முதல், செய்யறிவால் இயங்கும் ஓபன்ஏஐ-ன் சாட்ஜிபிடி தேடுதல் போன்றவை மக்களிடையே அதிக பயன்பாட்டுக்கு வந்திருந்தது.
இந்த நிலையில்தான், ஹிந்தி, இந்தோனேசியா, ஜப்பானீஸ், கொரியன், பிரேசிலியன் போர்த்துகீஸ் மொழிகளிலும் செய்யறிவு பயன்பாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
கூகுள் தன்னுடைய செய்யறிவு பயன்பாட்டில் ஹிந்தியை இணைத்திருப்பது, ஹிந்தி மொழி பேசும் மக்கள், தாய் மொழியிலேயே செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
வெகுகாலம் காத்திருப்பில் இருந்த உள்ளூர் மொழியில் செய்யறிவு பயன்பாடு கடந்த செவ்வாயன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, ஏராளமான உள்ளூர் மொழிகளில் செய்யறிவு பயன்பாட்டைக் கொண்டு வருவதற்கான ஆரம்பமாக அமைந்துள்ளது.
இது மொழி தடைகளை உடைத்து, ஹிந்தி பேசுபவர்கள் தேடல் தொழில்நுட்பத்துடன் தொடர்புகொள்ளும் விதத்தையே மாற்ற உதவும் என்று கூறப்படுகிறது.
இதுவரை ஹிந்தியில் கேள்வி எழுப்ப முடியாமல் இருந்தவர்களுக்கு இதன் மூலம் தங்களுக்குத் தேவையான தகவல்களை விரும்பியபடி கேட்டுப் பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தேடலை உறுதி செய்வது என்பது, வெறும் மொழிபெயர்ப்பு மட்டும் அல்லாமல், அதையும் தாண்டி, உள்ளூர் மொழிகளை துல்லியமாகப் புரிந்துகொள்வதில் இருக்கிறது. உள்ளூர் மொழிகளைப் புரிந்துகொள்வதில் மிகக்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனவே, கூகுளின் மிகவும் மேம்பட்ட செய்யறிவு தேடல், நாங்கள் புதிதாக இணைத்துள்ள உள்ளூர் மொழிகளில் தேடுவதற்கு பொருத்தமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், செய்யறிவு பயன்பாடானது, அமெரிக்காவில் உணவகங்கள் முன்பதிவு, உள்ளூர் சேவைகளுக்கான முன்பதிவு, நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் சேவையையும் இணைத்துக் கொண்டுள்ளது. இது கூகுள் ஏஐ அல்ட்ரா பயன்பாட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதையும் படிக்க... சார்லி கிர்க் கொலையாளி! வெளியானது புதிய விடியோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.