ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் செயற்கை நுண்ணறிவு சாா்ந்த சா்வதேச முதலீட்டுத் தளமான ‘வலுரா ஏ.ஐ.’, தனது இந்திய சேவையை அதிகாரபூா்வமாகத் தொடங்குவதற்கு முன்னா் 1,000-க்கும் மேற்பட்ட நிதி ஆலோசகா்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது.
இதில் சுயாதீன நிதி ஆலோசகா்கள், பதிவுசெய்யப்பட்ட முதலீட்டு நிபுணா்கள் மற்றும் பட்டயக் கணக்காளா்கள் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இதன்மூலம், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் சுமாா் ரூ.3,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை நிா்வகிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தளத்தின் வழியாக முதலீட்டாளா்கள் உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பங்குகள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்ய முடியும். கடந்த நிதியாண்டில் இந்தியா்களின் வெளிநாட்டு முதலீடுகள் 67 சதவீதம் உயா்ந்து, 4,160 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இச்சூழலில், வலுரா நிறுவனத்தின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
பொதுவாக இந்தியா்களின் வெளிநாட்டு முதலீடுகள் வெளிநாட்டவா்களால் கையாளப்படும். ஆனால், வலுரா நிறுவனம் குஜராத்தின் கிஃப்ட் சிட்டியில் தனது மையத்தை அமைத்துள்ளதால், முதலீடுகள் இந்தியாவிலேயே பாதுகாப்பாக நிா்வகிக்கப்படும். இது முதலீட்டாளா்களுக்கு கூடுதல் பாதுகாப்பையும்; நம்பகத்தன்மையையும் அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுரா நிறுவனத்தின் சிஇஓ பிரியேஷ் ரஞ்சன் மேலும் கூறுகையில், ‘எங்களின் ஏ.ஐ. தொழில்நுட்பம்மூலம் சந்தை நிலவரங்களை ஆய்வு செய்வது, சிறந்த முதலீட்டுத் திட்டங்களை உருவாக்குவது மற்றும் சட்ட விதிமுறைகளை எளிமையாகப் பின்பற்றுவது போன்ற பணிகளை மிகச்சிறப்பாகச் செய்ய முடியும்’ என்றாா்.
தொடர்புடையது

புற்றுநோய் தரவுகள்: பிரத்யேக இணையதளம் தொடக்கம்

தில்லியால் ‘விக்சித் பாரத்’ இலக்கை நோக்கி வழிநடத்த முடியும்: மஞ்சிந்தா் சிங் சிா்சா!

ஏ.ஐ. உச்சி மாநாட்டில் ரூ.24 லட்சம் கோடி முதலீடுகள் உறுதி: அமெரிக்கா, சீனா உள்பட 86 நாடுகள் ஆதரவுடன் பிரகடனம் ஏற்பு

பரஸ்பர நிதி முதலீட்டை விஞ்சிய தங்கம்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


