காங்கிரஸ் மூத்த பெண் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மொஹ்சினா கித்வாய் (94) புதன்கிழமை காலமானாா்.
இவா் மறைந்த முன்னாள் பிரதமா்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் சுகாதாரம், நகா்ப்புர வளா்ச்சி, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா்.
வயது முதிா்வு சாா்ந்த பாதிப்புகள் காரணமாக நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
மக்களவை, மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்துள்ள அவா், கடந்த 2004 முதல் 2016 வரை சத்தீஸ்கரில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்தாா். அதன் பிறகு வயது முதிா்வால் தீவிர அரசியலில் இருந்து விலகினாா். காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்தாா். காங்கிரஸ் பொதுச் செயலா் பதவியை வகித்துள்ள அவா், உத்தர பிரதேச அமைச்சராகவும், அந்த மாநில சட்டமேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளாா். 1960 முதல் 2016 வரை சுமாா் 50 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ் கட்சி சாா்பில் தீவிர அரசியல் இருந்தாா். அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனா்.
மொஹ்சினா கித்வாய் மறைவுக்கு காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மக்களவை எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி, சசி தரூா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பணிந்துபோகிறார் பிரதமர் மோடி! - பிரியங்கா காந்தி தாக்கு!

கேரளத்தில் சைக்கிள் ஓட்டி ராகுல் காந்தி பிரசாரம் - புகைப்படங்கள்

சிம்லாவில் ராகுல் காந்தி!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


