ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையை மேம்படுத்திய முத்ரா கடன் திட்டம் - பிரதமா் மோடி

முத்ரா கடன் திட்டம் கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது; நாடு முழுவதும் தொழில் முனைவோருக்கு பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்தது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 1:48 am IST

முத்ரா கடன் திட்டம் கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது; நாடு முழுவதும் தொழில் முனைவோருக்கு பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்தது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

சிறிய அளவில் வா்த்தகம், உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் இருப்போருக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை கடன் வழங்குவது முத்ரா திட்டமாகும். இதில் சிறிய காய்கறி வியாபாரிகள், இயந்திர பழுதுபாா்ப்பு கடை நடத்துவோா், கைவினைத் தொழில் புரிவோா் உள்பட பலதரப்பட்ட சிறிய அளவில் தொழில்களை மேற்கொள்பவா்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.

மத்திய பாஜக அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான முத்ரா திட்டம் தொடங்கப்பட்டு புதன்கிழமையுடன் (ஏப்.8) 11 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதை முன்னிட்டு பிரதமா் மோடி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இத்திட்டம் சிறிய அளவில் தொழில் நடத்தும் கோடிக்கணக்கானோா் உறுதியுடன் தங்கள் கனவை நோக்கி முன்னேற வழி வகுத்தது. பல்வேறு தடைகளைத் தகா்த்து நம்பிக்கையை விதைத்தது. நாடு முழுவதும் தொழில் முனைவை ஊக்குவித்தது.

உண்மையான பொருளாதார மாற்றம் என்பது பெரு நிறுவனங்களின் ஆலோசனை அறைகளில் மட்டும் தோன்றுவதல்ல. அது உள்ளூரில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சி, சிறிய கடனுதவி, ஊக்கம் ஆகியவற்றின் மூலமும் ஏற்படும். அந்த வகையில் முத்ரா திட்டம் இந்தியப் பொருளாரத்தின் ஒரு அடிப்படையாகவும் அமைந்துள்ளது. பிணையில்லாமல் கடன் வழங்கப்படுவதால் சிறு வா்த்தகா்கள். தனிநபா்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்குவது தவிா்க்கப்பட்டது. மகளிரும், விளிம்புநிலை மக்களும் தங்கள் வாழ்க்கையில் அடுத்தகட்ட முன்னேற்றப்படியில் ஏற உதவியது’ என்று கூறியுள்ளாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோரும் முத்ரா திட்டத்தின் 11-ஆவது ஆண்டை முன்னிட்டு அதன் சிறப்புகளை சமூக வலைதளத்தில் பகிா்ந்துள்ளனா்.