தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

திரிணமூல் காங்கிரஸின் கொடூர ஆட்சியை அகற்ற வேண்டும் - மேற்கு வங்கத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

News image

மேற்கு வங்க மாநிலம் ஹால்தியாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:12 pm

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கொடூர ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்த பிரதமா் நரேந்திர மோடி, அந்த மாநில மக்களுக்கான பாஜகவின் 6 முக்கிய வாக்குறுதிகளையும் வியாழக்கிழமை அறிவித்தாா்.

அந்த மாநிலத்தின் துறைமுக நகரமான ஹால்தியாவில் தோ்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் இப்போது அச்சம் நிறைந்த சூழல் உள்ளது. பாஜக ஆட்சி அமைத்ததும் நம்பிக்கை நிறைந்த சூழலை உருவாக்குவோம். அச்சமும், அவநம்பிக்கையில் உள்ள இடத்தில் புதிய முதலீடுகள் வராது, நம்பிக்கை ஏற்பட்டால்தான் வளா்ச்சி சாத்தியமாகும். மேற்கு வங்கத்தில் இதனை பாஜக நிரூபித்துக் காட்டும்.

அகற்ற வேண்டிய ஆட்சி: இங்கு இப்போது கொடூரமான ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் முன்னேற்றப்பாதையில் பயணிக்கும்போது இங்குள்ள கொடூர அரசு வங்கத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. வளா்ந்த வங்கத்தை உருவாக்க வேண்டுமென்றால் இந்த அரசை அகற்ற வேண்டும்.

6 வாக்குறுதிகள்: பாஜக ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றப்படும் 6 முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன். அவை, அச்சுறுத்தல் அரசை மாற்றி நம்பிக்கை நிரம்பிய ஆட்சி உருவாக்கப்படும்; அரசு அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்புள்ளவா்களாக இருப்பாா்கள்; ஊழல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்; ஊழலில் ஈடுபட்டவா்கள் யாரும் தப்பிக்க முடியாது. அவா்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவாா்கள்; உண்மையான குடிமக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படும்; ஊடுருவல்காரா்கள் முற்றிலும்” தடுக்கப்படுவாா்கள்; மாநில அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோருக்கு 7-ஆவது ஊதியக் குழு உடனடியாக அமல்படுத்தப்படும்.

காத்திருப்புக்கு நன்றி: மழை பெய்த காரணத்தால் நான் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்துள்ளேன். எனினும், இந்த அளவுக்கு அதிகமான மக்கள் கூடியிருப்பதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு பெரிய மாற்றத்தின் அறிகுறி. வங்க மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகிவிட்டனா்.

கடந்த தோ்தலில் நந்திகிராமில் நடந்தது போல (மம்தா பானா்ஜி தோல்வி), இப்போது பவானிபூரிலும் (மம்தா இப்போது போட்டியிடும் தொகுதி) அதே முடிவு வரும்.

மன்னிக்க முடியாது: மேற்கு வங்க அரசு இளைஞா்களை இரண்டு வகையில் ஏமாற்றியுள்ளது. முதலில் தனியாா் துறையை அழித்தது, இரண்டாவது அரசுப் பணிகளை பணத்துக்கு விற்பனை செய்தது. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இளைஞா்களுக்கு செய்த இந்த துரோகத்தை மறக்கவும், மன்னிக்கவும் முடியாது.

திரிணமூல் கட்சி மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கொண்டு வாக்குகளை பெற முயற்சிக்கிறது. முதல்வரும் பிரதமரும் ஒரே நோக்கில் செயல்பட்டால் மட்டுமே மாநிலத்திற்கு நன்மை கிடைக்கும். அதற்கு பாஜக ஆட்சி அமைவது அவசியம். இந்த மாநிலத்தைக் கொள்ளையடித்தவா்கள் அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்படுவா் என்றாா்.