நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக, வரும் ஏப்.16 முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அமா்வில் தவறாமல் பங்கேற்கும்படி பாஜக எம்.பி.க்கள் அனைவருக்கும் அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமல்படுத்தவும், அதற்கிணங்க மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 816-ஆக அதிகரிக்கவும் வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களைக் கொண்டுவந்து நிறைவேற்றும் நோக்கில் சிறப்பு அமா்வு நடைபெறவுள்ளது.
இது தொடா்பான வரைவு மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிவிட்டதாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில், ஏப்.16 முதல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் தங்களது கட்சியைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள் மற்றும் எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று பாஜக தரப்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘ஏப்.16 முதல் 18 வரையிலான மூன்று நாள்களிலும் நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்பது கட்டாயம். யாருக்கும் விடுப்பு கிடையாது. கொறடா உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடித்து, கட்சி எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும்’ என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இடையன்விளை கோயில் கொடை விழா

‘ஆண்டவன் உத்தரவு’: சிவன்மலை முருகன் கோயிலில் மண் கலயத்தில் தீா்த்தம் வைத்து பூஜை
மகளிா் இடஒதுக்கீடு: தில்லி பேரவையின் சிறப்பு அமா்வு நாளை கூடுகிறது!

22.4.1976: ஒரு கல்யாணத்தில் மொத்தம் 200 பேருக்கு தான் சாப்பாடு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

