/

ஹஜ் பயணம்: ஜம்முவிலிருந்து 431 பேர் அடங்கிய முதல் குழு புறப்பட்டது!

ஜம்மு-காஷ்மீரில் இருந்து முதல் குழு புறப்பட்டது தொடர்பாக...

News image

ஹஜ் புனிதப் பயணம் - DPS

Updated On :18 ஏப்ரல் 2026, 12:38 pm IST

ஹஜ் புனித யாத்திரைக்காக, ஜம்மு-காஷ்மீரில் இருந்து 431 பேருடன் முதல் குழு சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீருக்கான ஹஜ் கமிட்டி அலுவலர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஜம்மு காஷ்மீரிலிருந்து இந்த ஆண்டு மொத்தம் 4,764 பேர் புனித யாத்திரையை மேற்கொள்ள உள்ளனர்.

ஸ்ரீநகரில் இருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு நேரடியாக விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஹஜ் யாத்திரைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன

அதன்படி, 230 ஆண்கள், 201 பெண்கள் உள்பட பயணிகள், மூன்று விமானங்கள் மூலம் புறப்பட்டுச் சென்றதாக அவர் கூறினர்.

ஹஜ் பயணிகளின் புறப்பாடு சீராக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், போக்குவரத்து, உடைமைகளைக் கையாளுதல் மற்றும் ஆவணப் பணிகள் தொடர்பான அனைத்துத் தேவையான ஏற்பாடுகளும், இங்குள்ள பெமினாவில் அமைந்துள்ள ஹஜ் இல்லத்தில் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புறப்பட்டுச் செல்லும் பயணிகளுக்கு விடையளிக்க, நூற்றுக்கணக்கான குடும்ப உறுப்பினர்கள் ஹஜ் இல்லத்திற்கு வெளியே திரண்டிருந்தனர்.

Summary

The first batch of 431 pilgrims from Jammu and Kashmir left for Saudi Arabia for the annual Haj pilgrimage on Saturday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.