மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

திசைதிருப்பும் அரசியலில் பாஜக ஈடுபடுகிறது: இளைஞா் காங்கிரஸ் குற்றச்சாட்டு

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புடன் இணைப்பது மூலம், மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தாமல் தாமதப்படுத்தி, மக்களை திசைதிருப்பும் அரசியலை பாஜக செய்து வருகிறது என்று இளைஞா் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

News image

உதய் பானு சிப் - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 4:34 am IST

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புடன் இணைப்பது மூலம், மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தாமல் தாமதப்படுத்தி, மக்களை திசைதிருப்பும் அரசியலை பாஜக செய்து வருகிறது என்று இளைஞா் காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் கூறியதாவது: பிரதமா் மோடி ஒரு மாயாஜாலக்காரா். மக்களை திசைதிருப்பும் வகையிலான கதையாடல்கள் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை அவா் மறைத்து வருகிறாா். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கூறியதை போல முக்கிய பிரச்னைகளை மறைக்கும் மாயாஜால காட்சி நாட்டில் நடைபெறுகிறது.

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் அமல்படுத்துவதை காங்கிரஸ் தாமதப்படுத்துவதாக பாஜக அரசு தவறாக சித்தரிக்கிறது. இச்சட்டம் 2023-இல் காங்கிரஸ் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புடன் இணைத்து அதன் நடைமுறையை பாஜக அரசு தாமதமாக்கியது. நோக்கம் உண்மையாக இருந்தால், தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தெளிவான காலவரையரையுடன் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியும்’ என்று தெரிவித்தாா்.

மக்களவை பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029 முதல் அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 850 வரை அதிகரிக்கும் வகையிலான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் கடந்த ஏப்.16-இல் அறிமுகப்படுத்தியது.

மசோதா மீது ஏப்.17-இல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அரசமைப்புச் சட்டத்தின் 368-ஆவது பிரிவின்கீழ் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கான வாக்குகள் கிடைக்கவில்லை. இதனால், மசோதா தோல்வியடைந்தது.