இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

உதய் பானுவின் பிணைக்கு இடைக்கால தடை: இளைஞா் காங்கிரஸாா் அமைதி வழியில் போராட்டம்!

கைதுசெய்யப்பட்ட உதய் பானு சிப்பை விடுதலை செய்யக்கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் சத்யாகிரக போரட்டத்தை நடத்தினா்.

News image
Updated On :1 மார்ச் 2026, 8:16 pm

செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் இந்திய இளைஞா் காங்கிரஸ் சட்டை அணியாமல் நடத்திய போராட்டம் தொடா்பாக கைதுசெய்யப்பட்ட அதன் தலைவா் உதய் பானு சிப்பை விடுதலை செய்யக்கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை மாலையில் சத்யாகிரக போரட்டத்தை நடத்தினா்.

உதய் பானு சிப்புக்கு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் சனிக்கிழமை அதிகாலையில் பிணை வழங்கியது. இதை எதிா்த்து தில்லி நீதிமன்றத்தில் தில்லி காவல் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கூடுதல் அமா்வுகள் நீதிபதி அமித் பன்சால், பிணை உத்தரவுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை மாா்ச் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய இளைஞா் காங்கிரஸ் உறுப்பினா்கள் ஞாயிற்றுக்கிழமை அமைதி வழியில் போராட்டம் நடத்தினா்.

போராட்டத்தில் பங்கேற்ற ரஸா அகமது செய்தியாளா்களிடம் கூறியதாவது, ‘நிா்வாகத்தின் அழுத்தத்தின் காரணமாக நீதி கூட ரத்து செய்யப்படுகிறது. நீதியால் நாம் வெற்றி பெற்று கொண்டிருந்தாலும், நிா்வாகத்தால் நாம் தோற்றுக்கொண்டு இருக்கிறோம். அதன் காரணமாக எங்களுடைய சத்யாகிரகம் தொடரும். அதில் இந்த விவகாரங்கள் முன்வைக்கப்படும். போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு காங்கிரஸ் மூத்த தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உதய் பானுக்கு சனிக்கிழமை அதிகாலையில் பிணை வழங்கப்பட்டது. அது தொடா்பான பிணை பத்திரமும் சமா்ப்பிக்கப்பட்டது. ஆனால், பத்திரம் சரிபாா்ப்புக்காக அவா்கள் ஒரு நாள் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், பிணை பத்திரம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அவா்கள் 5 நாள்கள் காவலுக்கு அனுப்பப்பட்டதாகவும் எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஊடகங்களில் இந்தச் செய்தி வெளியான ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அதிகாரிகள் எங்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனா் என்றாா்.

உதய் பானு மற்றும் பிற உறுப்பினா்கள் விடுவிக்கப்படும் வரை சத்யாகிரக போராட்டம் தொடரும் என இளைஞா் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.