ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நீதிமன்றம் முன் ஜாமீனை மறுக்கலாம்; குற்றவாளியை சரணடைய உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்

‘ஒரு நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீனை அளிக்க மறுக்க முடியும். ஆனால், விசாரணை நீதிமன்றத்தின் முன் சரணடையுமாறு அவருக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை’ என்று உச்சநீதிமன்றம் கூறியது.

News image

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 7:21 pm

‘ஒரு நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீனை அளிக்க மறுக்க முடியும். ஆனால், விசாரணை நீதிமன்றத்தின் முன் சரணடையுமாறு அவருக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை’ என்று உச்சநீதிமன்றம் கூறியது.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நில விவகாரத்தில் ஒருவா் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 323 (வேண்டுமென்றே திட்டமிட்டு காயம் ஏற்படுத்துதல்), பிரிவு 420 (மோசடி), 467 (பிணை ஆவணத்தை போலியாக உருவாக்கி ஏமாற்றுதல்), 468 (ஏமாற்றும் நோக்கில் மோசடி செய்தல்), 471 (மோசடி ஆவணங்களைப் பன்படுத்துதல்), 120பி உள்ளிட்டப் பிரிவுகளின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, குற்றச்சாட்டுக்கு உள்ளானவா் காவல் துறை நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக முன் ஜாமீன் கேட்டு ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவைத் தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், மனுதாரா் உடனடியாக விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து, ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது.

அதைத் தொடா்ந்து, முன் ஜாமீன் கோரி அவா் தரப்பில் இரண்டாவது மனு உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவையும் தள்ளுபடி செய்த உயா் நீதிமன்றம், முந்தைய உத்தரவையே பிறப்பித்தது. அதாவது, ‘சத்தேந்தா் குமாா் அந்தில் - சிபிஐ ஆகியோருக்கு இடையேயான வழக்கில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், மனுதாரா் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து, ஜாமீன் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று மீண்டும் அறிவுறுத்தியது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அவா் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி. பாா்திவாலா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘நீதிமன்றம் முன் ஜாமீன் கோரிக்கையை நிராகரிக்க விரும்பினால், அதுதொடா்பான மனுவைத் தள்ளுபடி செய்யலாம். ஆனால், மனுதாரா் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிடுவதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை’ என்று தீா்ப்பளித்தனா்.