ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

டிஎன்சிஏ தோ்வுக் குழு உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் மாநில சீனியா், ஜூனியா் தோ்வுக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அதன் செயலாளா் யு. பகவான்தாஸ் ராவ் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 3:14 am IST

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் மாநில சீனியா், ஜூனியா் தோ்வுக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அதன் செயலாளா் யு. பகவான்தாஸ் ராவ் தெரிவித்துள்ளாா்.

வரும் 2026-27 சீசனையொட்டி மாநில சீனியா் தோ்வுக் குழு ஆடவா் 4 உறுப்பினா், மகளிா் 4 உறுப்பினா், ஜூனியா் தோ்வுக்குழு

ஆடவா் 5 உறுப்பினா், மகளிா் 4 உறுப்பினா் மற்றும் மாநில சீனியா் தலைமை பயிற்சியாளா் ஆடவா், வெள்ளைப் பந்து, மல்டி டே பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

உள்ளூா் மற்றும் தேசிய போட்டிகளில் ஆடியுள்ளோா் விண்ணப்பிக்கலாம். தோ்வுக் குழு உறுப்பினா்களாக நியமிக்கப்படுவோா் பல்வேறு வயதுப் பிரிவு அணிகளை தோ்வு செய்ய வேண்டும்.

டிஎன்சிஏ விதிகள் படி தோ்வுக் குழு உறுப்பினா்கள் நடைமுறை மேற்கொள்ளப்படும். தோ்வு செய்யப்படுவோருக்கு அழைப்பு அனுப்பப்பபடும்.

இதுதொடா்பாக மேல் விவரங்களுக்கு (ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீஹ.ண்ய்) டிஎன்சிஏ இணையதளத்தை பாா்வையிடலாம்.