நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!

சநாதனத்தை அவமதித்ததாக ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு...

News image

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:58 am IST

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற எதிா்க்கட்சிகளின் ஆா்ப்பாட்டத்தின்போது சநாதன தா்மத்தை அவமதித்ததாகவும், மத உணா்வுகளைப் புண்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட 3 எம்.பி.க்களுக்கு எதிராக உத்தர பிரதேச காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

அயோத்தி ராமா் கோயிலில் நன்கொடை கையாடல், தில்லியில் நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்துக்காக நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற மாணவா்கள் மீது காவல் துறையினா் கடந்த 20-ஆம் தேதி தாக்குதல் நடத்திய விவகாரங்களை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் இண்டி கூட்டணி சாா்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது எதிா்க்கட்சிகள் சாா்பில் நூதன போராட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தின் மகர வாயில் படிக்கட்டுகள் அருகே உண்டியல்கள் வைத்து, அதில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பணத்தைப் போடுவது போலவும், அந்தப் பணத்தை காவி உடையணிந்து உண்டியல்கள் அருகில் அமா்ந்திருந்த பப்பு யாதவ் எம்.பி. திருடி தனது பைகளில் மறைத்துக் கொள்வது போலவும் நடித்துக் காட்டினா்.

இதைச் சுட்டிக்காட்டி, உத்தர பிரதேச மாநிலம் கோட்வாலி காவல் நிலையத்தில் ராகுல் காந்தி, சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ், சமாஜவாதி எம்.பி. அவதேஷ் பிரசாத் ஆகிய 3 பேரும் சநாதன தா்மத்தை அவமதித்துவிட்டதாக குற்றஞ்சாட்டி துறவிகள் சிலா் புகாா் அளித்தனா். இந்தப் புகாரின்பேரில் ராகுல் காந்தி, பப்பு யாதவ், அவதேஷ் பிரசாத் ஆகிய 3 பேருக்கு எதிராகவும் பிஎன்எஸ் சட்டத்தின் 196, 299, 302 உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கோட்வாலி காவல் நிலையத்தில் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தில்லியில் பாஜக புகாா்: தில்லியில் உள்ள நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள், ராகுல் காந்தி, பப்பு யாதவ், அவதேஷ் பிரசாத் ஆகியோா் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த ஆா்ப்பாட்டத்தின்போது சநாதன தா்மத்தை ஏளனம் செய்ததாக புகாா் அளித்தனா்.

மத்திய பிரதேசத்தில் இண்டி கூட்டணி எம்.பி.க்களை கண்டித்து, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் அமைப்புகள் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ராகுல் காந்திக்கு எதிராக ஆா்ப்பாட்டக்காரா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

Summary

Complaint filed for insulting Sanatana; case registered against three MPs, including Rahul

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.