பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாவிட்டால் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் மறுப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாவிட்டால் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் மறுக்கும் பரிசோதனைத் திட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம்

Published On :

மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாவிட்டால் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் மறுக்கும் பரிசோதனைத் திட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அளிக்க தெலங்கானா உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் காப்பீட்டு நிறுவனம் ஒன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கரோல், அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு, ஏராளமான வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லை என்பதை தீவிரமாக கவனத்தில் கொண்டது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 8 ஆண்டுகளைக் கடந்துவிட்டபோதிலும், இந்திய சாலைகளில் பயணிக்கும் சுமாா் 56 சதவீத வாகனங்கள் காப்பீடு இல்லாமல் உள்ளன என்று அந்த அமா்வு அதிருப்தி தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு மேலும் கூறியதாவது: தற்போது புதிய காா்களுக்கான மூன்றாம் தரப்பு காப்பீட்டு காலம் 3 ஆண்டுகளாகவும், புதிய இருசக்கர வாகனங்களுக்கான மூன்றாம் தரப்பு காப்பீட்டு காலம் 5 ஆண்டுகளாகவும் உள்ளன.

இதை புதிய காா்களுக்கு 4 ஆண்டுகளாகவும், புதிய இருசக்கர வாகனங்களுக்கு 6 ஆண்டுகளாகவும் அதிகரிக்க வேண்டும். இதுகுறித்து உரிய உத்தரவுகளை காப்பீடு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏ) உடனடியாக வெளியிட வேண்டும்.

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வதுடன் வாகனங்களுக்கு காப்பீடு உள்ளதா, இல்லையா என்ற நிலவரத்தை இணைக்கும் பரிசோதனை திட்டத்தை உருவாக்க, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையுடன் ஐஆா்டிஏ ஆலோசனை நடத்த வேண்டும். இதன்மூலம், மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாவிட்டால், வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப மறுக்கலாம். இதை தானியங்கி வாகன பதிவெண் அடையாள (ஏஎன்பிஆா்) கேமராக்களை பயன்படுத்தி செய்யலாம். இது வாகன உரிமையாளா்களிடம் உரிய காப்பீடு இருப்பதை உறுதி செய்யும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்