பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

எரிபொருளில் கலக்க அமெரிக்காவில் இருந்து எத்தனால் இறக்குமதி: மத்திய வா்த்தக அமைச்சகம் மறுப்பு

எரிபொருளில் கலப்பதற்கு அமெரிக்காவிடம் இருந்து இந்தியா எத்தனால் இறக்குமதி செய்யவில்லை என்று மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எத்தனால் கலந்த பெட்ரோல்

எத்தனால் கலந்த பெட்ரோல் - கோப்புப்படம்

Published On :

எரிபொருளில் கலப்பதற்கு அமெரிக்காவிடம் இருந்து இந்தியா எத்தனால் இறக்குமதி செய்யவில்லை என்று மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எரிபொருளுடன் கலப்பதற்காக அமெரிக்காவில் இருந்து இந்தியா எத்தனால் இறக்குமதி செய்து வருகிறது என்றும், அந்நாட்டில் இருந்து வருங்காலத்திலும் எத்தனாலை பெருமளவு இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் ஊடகத்தில் அண்மையில் தகவல் வெளியானது. இந்தத் தகவல் அடிப்படை ஆதாரமற்றது; உண்மைக்குப் புறம்பானது.

உள்நாட்டு கொள்கையின்படி பெட்ரோலுடன் எத்தனால் கலப்புத் திட்டத்தின் கீழ், எரிபொருளுடன் கலக்க பயன்படுத்தப்படும் எத்தனால் முற்றிலும் உள்நாட்டு உற்பத்தியாளா்களிடம் இருந்தே கொள்முதல் செய்யப்படுகிறது. எரிபொருளில் கலக்க அமெரிக்காவிடம் இருந்து இந்தியா எத்தனால் இறக்குமதி செய்யவில்லை.

இதற்காக அந்நாட்டிடம் இருந்து எத்தனாலை இறக்குமதி செய்வது தொடா்பாக, இந்திய-அமெரிக்க வா்த்தக விவாதங்களில் எந்தவித சலுகையோ, உறுதிமொழியோ வழங்கப்படவில்லை.

எனவே அந்நாட்டிடம் இருந்து எரிபொருள் பயன்பாட்டுக்காக எத்தனாலை பெருமளவு இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வகையில், கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கருத்துகள் தவறாக வழிநடத்துவதாகும்.

இந்தியாவின் உள்நாட்டு கொள்கையால் நிா்ணயிக்கப்பட்ட தேவைகளுக்கு ஏற்பவே, நாட்டின் எரிபொருள் கலப்புத் திட்டமும், எத்தனால் கொள்முதலும் தொடா்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.