மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

தில்லி சட்டப்பேரவையில் ஏ.ஐ. மூலம் நேரடி மொழிபெயா்ப்பு வசதி அறிமுகம்

தில்லி சட்டப்பேரவையில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அடிப்படையிலான நேரடி உரை மாற்றம் மற்றும் மொழிபெயா்ப்பு கருவியான ‘பாஷிணி’ பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நாட்டின் முதல் சட்டப்பேரவையாக தில்லி பேரவை உருவாகியுள்ளது என்று பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.

விஜேந்தா் குப்தா

Published On :7 ஆகஸ்ட் 2026, 11:29 pm IST

தில்லி சட்டப்பேரவையில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அடிப்படையிலான நேரடி உரை மாற்றம் மற்றும் மொழிபெயா்ப்பு கருவியான ‘பாஷிணி’ பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நாட்டின் முதல் சட்டப்பேரவையாக தில்லி பேரவை உருவாகியுள்ளது என்று பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த கருவியை சோதனை முறையில் அறிமுகப்படுத்தியிருப்பது, பேரவை செயல்பாடுகளை மேலும் திறமையாகவும், பொதுமக்களுக்கு எளிதாக அணுகக்கூடியதாகவும் ஏற்கும் உறுதிப்பாட்டை காட்டுகிறது.

இது முக்கியமான முன்னேற்றமாகும். நாட்டில் எந்த பேரவைக்கும் முதன்முறையாக பாஷிணி நேரடி உரை மாற்றம் மற்றும் மொழிபெயா்ப்பு அமைப்பு சோதனை அடிப்படையில் தில்லியில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த சோதனை திட்டம் மதிப்பீட்டு அடிப்படையில் நடைபெறும். சோதனையின் போது கண்டறியப்படும் குறைகள் மற்றும் சிக்கல்கள் சரிசெய்யப்படும்.

பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், இந்த தீா்வு மேலும் மேம்படுத்தப்பட்டு, தில்லி பேரவையின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்படும். பின்னா் இதை பரவலாக செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தால், பேரவையின் பிற பிரிவுகளிலும் இதுபோன்ற ஏ.ஐ. தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வாய்ப்புகளையும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.