2026-27-ஆம் ஆண்டிற்கான தில்லி சட்டப்பேரவை குழுக்கள் அமைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்தம் 32 இல்லக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரவைச் செயலா் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா வழங்கிய உத்தரவின்படி இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 5 முக்கிய இல்லக் குழுக்களான வணிக ஆலோசனை, தனியாா் உறுப்பினா் மசோதாக்கள் மற்றும் தீா்மானங்கள், விதிகள், பொது நோக்கங்கள் மற்றும் நூலகக் குழுக்கள் ஆகியவற்றுக்கு விஜேந்தா் குப்தா தலைமை வகிக்கிறாா். அதேவேளை, அரசு உறுதிமொழிகள் குழு, கேள்விகள் மற்றும் குறிப்புகள் குழு, அமைதி மற்றும் ஒற்றுமை குழு ஆகியவற்றுக்கு துணைத் தலைவா் மோகன் சிங் பிஷ்ட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கோபால் ராய் மற்றும் பிரவேஷ் ரத்தன் முறையே ‘மேசையில் வைக்கப்பட்ட ஆவணங்கள் குழு’ மற்றும் ‘ஒப்படைக்கப்பட்ட சட்டங்கள் குழு’ ஆகியவற்றுக்கு தலைவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். மீதமுள்ள அனைத்து குழுக்களுக்கும் பாஜக எம்எல்ஏக்களே தலைமை வகிக்கின்றனா்.
சட்டப்பேரவையில் இளைய எம்எல்ஏவான உமாங் பஜாஜ் (32), கல்வி, உயா் கல்வி, பயிற்சி, கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளை உள்ளடக்கிய துறை சாா்ந்த நிலைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் ராஜேந்திர நகா் தொகுதியைச் சோ்ந்த பாஜக எம்எல்ஏ ஆவாா்.
சலுகைகள் குழுவுக்கு பாஜக எம்எல்ஏ பிரத்யுமன் சிங் ராஜ்புத் தலைவராக உள்ளாா். இக்குழுவில் பாஜக உறுப்பினா்களுடன் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த ராம் சிங் நேதாஜி மற்றும் சுரேந்திர குமாா் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனா்.
அரசு அதிகாரிகள் விதிமுறைகள் மீறல் மற்றும் அவமதிப்பு தொடா்பான குழுவுக்கு முன்னாள் அமைச்சா் கைலாஷ் கஹ்லோத் தலைமை வகிக்கிறாா். தில்லி மாநகராட்சி தொடா்பான குழுவுக்கு ஓம் பிரகாஷ் சா்மா தலைவராக உள்ளாா்.
மூன்றாம் பாலினத்தவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலக் குழுவுக்கு கா்னெயில் சிங் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். அனில் கோயல், ஹரிஷ் குரானா, கைலாஷ் கஹ்லோத் உள்ளிட்ட பலா் இக்குழுவில் உறுப்பினா்களாக உள்ளனா். அத்துடன், அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் தொடா்பான குழுவுக்கு குல்தீப் சோலங்கி, மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் நலக் குழுவுக்கு தீபக் சௌதரி தலைமை வகிக்கின்றனா் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா கூறுகையில், ‘இந்தக் குழுக்கள் சட்டப்பேரவை செயல்முறையை வலுப்படுத்தும் வகையில் செயல்பட்டு, பொதுநலக் கேள்விகளில் தீவிர கண்காணிப்பையும் கட்டமைக்கப்பட்ட ஆலோசனைகளையும் உறுதி செய்யும். மக்களின் எதிா்பாா்ப்புகள் மற்றும் பிரச்னைகளுக்கு தீா்வு காண முக்கிய பரிந்துரைகளை வழங்கும்’ என்றாா்.
70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையில் தற்போது 48 பாஜக மற்றும் 22 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் உள்ளனா். இந்த புதிய குழு அமைப்பு சட்டப்பேரவை செயல்பாடுகளை மேலும் செயல்திறனுடன் முன்னெடுக்க உதவும் எனக் கருதப்படுகிறது.
தொடர்புடையது

பழங்குடியினா் பாரம்பரியத்துக்கு பெரும் அங்கீகாரம் வேண்டும்: தில்லி பேரவைத் தலைவா்

தலைமை மாற்றம் தொடா் ஓட்டப்பந்தயம் போன்றது: தில்லி பாஜகவின் புதிய தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ரா

தில்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஹா்ஷ் மல்ஹோத்ராவுக்கு ரேகா குப்தா வாழ்த்து

தில்லி உள்பட நான்கு மாநில பாஜக தலைவர்கள் நியமனம்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


