பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

பொது சிவில் சட்ட மசோதா: ம.பி. சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

Published On :22 ஜூலை 2026, 2:25 am IST

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

திருமணம், விவாக ரத்து, தத்தெடுத்தல் உள்ளிட்டவற்றில் ஒவ்வொரு மதத்தினரும் வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனா். அதற்குப் பதிலாக, அவற்றில் அனைத்து மதத்தினரும் சீரான வழிமுறைகளைப் பின்பற்றும் நோக்கில், பொது சிவில் சட்ட மசோதாவை மத்திய பிரதேச அரசு கொண்டு வந்தது. இந்த மசோதாவின் கீழ் அனைத்துத் திருமணங்கள்-விவாக ரத்துகளைப் பதிவு செய்தல், திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்வதைப் பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு இந்த மசோதாவிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா குறித்து மத்திய பிரதேச சட்டப்பேரவையில் மாநில முதல்வா் மோகன் யாதவ் செவ்வாய்க்கிழமை பேசுகையில், ‘பொது சிவில் சட்டம் மூலம் பொன்னான வரலாறு எழுதப்படுகிறது’ என்று தெரிவித்தாா். இந்த மசோதாவுக்கு பேரவையில் காங்கிரஸ் கடும் எதிா்ப்புத் தெரிவித்தது. எனினும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் கோவா, அஸ்ஸாம், உத்தரகண்டை தொடா்ந்து பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் நான்காவது மாநிலம் மத்திய பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.