கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ம.பி. அமைச்சரவை ஒப்புதல்!

பொது சிவில் சட்ட வரைவு மசோதாவுக்கு மத்திய பிரதேச மாநில அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

News image

முதல்வர் மோகன் யாதவ்

Updated On :20 ஜூலை 2026, 5:38 am IST

பொது சிவில் சட்ட வரைவு மசோதாவுக்கு மத்திய பிரதேச மாநில அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக தலைநகர் போபாலின் புறநகர்ப் பகுதியான ஜகதீஷ்பூரில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பின் மாநில முதல்வர் மோகன் யாதவ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொது சிவில் சட்ட மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவானது பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நடவடிக்கைகளில் முக்கியமானதாகும். இந்த வரைவு மசோதாவை உருவாக்குவதற்கான குழுவின் முன் 80 சதவீத முஸ்லிம் பெண்களும், 40 சதவீத முஸ்லிம் ஆண்களும் அதை ஆதரித்தனர்.

புதிய மசோதாவின்படி ஆண்களுக்கான திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கு 18 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது. பொது சிவில் சட்டத்தின்படி திருமணத்தைப் பதிவு செய்வது கட்டாயமாகும்.

மசோதா வரைவுக் குழுவின் முன் பாஜக, ஆம் ஆத்மி கட்சி, இடதுசாரிக் கட்சிகள் தங்கள் கருத்துகளைச் சமர்ப்பித்துள்ள நிலையில், ஒவ்வொரு விவகாரத்தையும் ஹிந்து}முஸ்லிம் மற்றும் வாக்கு வங்கி நோக்கில் பார்க்கும் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிப்பதில் இருந்து விலகி இருந்துள்ளது.

திருமணம், சேர்ந்து வாழ்வது, தத்தெடுத்தல் ஆகியவற்றின் மூலம் பிறக்கும் குழந்தைகள் மற்றும் வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தைகள் என அனைவருக்கும் பொது சிவில் சட்டம் சமமான சட்ட அந்தஸ்தை அளிக்கிறது.

திங்கள்கிழமை தொடங்க உள்ள மத்திய பிரதேச சட்டப் பேரவையின் ஐந்து நாள் மழைக்காலக் கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படும் என்றார் அவர்.

முன்னதாக, மத்திய பிரதேச மாநிலத்துக்கான பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை உருவாக்குவதற்கு உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தலைமையில் அரசு அமைத்த குழு தனது அறிக்கையை முதல்வர் வசம் அண்மையில் சமர்ப்பித்தது. பொது சிவில் சட்ட வரம்பில் இருந்து பழங்குடியினருக்கு (ஆதிவாசிகள்) விலக்கு அளித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.

வரைவு மசோதா குழுவானது பல்வேறு தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரங்கள், திருமணம், விவாகரத்து, பராமரிப்பு, வாரிசு உரிமை, தத்தெடுத்தல், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது உள்ளிட்டவை குறித்து ஆராயுமாறு கோரப்பட்டிருந்தது.

அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தின் கலாசார, சமூக, பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இக்குழு பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை உருவாக்கியிருந்தது.

பாலின சமத்துவம், பல்வேறு சடங்கு நடைமுறைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தியும், தற்போதுள்ள சம்பிரதாயங்கள் மற்றும் அரசியல் சாசன ஷரத்துகளுக்கு மதிப்பளித்தும் இக்குழு வரைவு மசோதாவை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.