தில்லி, உத்தர பிரதேசத்தில் ரூ.14,115 கோடிக்கு சாலைத் திட்டங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து புது தில்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தில்லியில் வசந்த் குஞ்ச், நெல்சன் மண்டேலா சாலையுடன் துவாரகை விரைவுச் சாலையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை-148ஏஇ-க்கான ஆறு வழிச் சாலை சுரங்கப்பாதை கட்டுமானத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 8.1 கி.மீ தொலைவிலான இந்தச் சாலை திட்டம் ரூ.6,969.67 கோடி மூலதன செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதேபோல உத்தர பிரதேசத்தில் ரூ.7,145.14 கோடி செலவில் 117.7 கி.மீ. தொலைவுக்கு கான்பூா்-கப்ரை பசுமை வழி நெடுஞ்சாலை அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்ஐஐஎஃப்பில் கூடுதலாக ரூ.30,000 கோடி முதலீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தில்லி மின்சார வாகன கொள்கை 2.0-க்கு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்: முதல்வா் ரேகா குப்தா தீவிர பரிசீலனை

அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்ட 2-ஆம் கட்டப் பணிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்






