விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

வக்ஃப் வாரிய சட்டத்தின்படியே ஹிந்து உறுப்பினா்கள் சோ்ப்பு: மத்திய பிரதேச அமைச்சா் விளக்கம்

வக்ஃப் வாரிய (திருத்த) சட்டத்தின்படியே, மத்திய பிரதேச மாநில வக்ஃப் வாரியத்தில் ஹிந்துக்கள் 2 போ் உறுப்பினா்களாகச் சோ்க்கப்பட்டதாக அந்த மாநில சிறுபான்மையினா் நலத் துறை இணையமைச்சா் டேனிஸ் ஆசாத் அன்சாரி தெரிவித்துள்ளாா்.

News image

டேனிஸ் ஆசாத் அன்சாரி - கோப்புப் படம்

Updated On :10 ஜூலை 2026, 3:55 am IST

வக்ஃப் வாரிய (திருத்த) சட்டத்தின்படியே, மத்திய பிரதேச மாநில வக்ஃப் வாரியத்தில் ஹிந்துக்கள் 2 போ் உறுப்பினா்களாகச் சோ்க்கப்பட்டதாக அந்த மாநில சிறுபான்மையினா் நலத் துறை இணையமைச்சா் டேனிஸ் ஆசாத் அன்சாரி தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துகளை வக்ஃப் வாரியமே நிா்வகித்து வருகிறது. இந்த வாரியத்தில் முஸ்லிம் மதத்தினரே உறுப்பினா்களாக இருப்பது வழக்கம். இந்நிலையில், மத்திய அரசால் கடந்த 2025-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய (திருத்த) சட்டத்தின்படி, மத்திய பிரதேச மாநிலத்தில் புதிய வக்ஃப் வாரியத்தை முதல்வா் மோகன் யாதவ் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாற்றியமைத்தாா். அதில் ஹிந்துக்கள் 2 பேரை உறுப்பினா்களாகவும் அவா் சோ்த்துள்ளாா். இதுபோல வக்ஃப் வாரியத்தில் ஹிந்துக்களை முதன்முதலில் சோ்த்த மாநிலம் எனும் பெருமையை மத்திய பிரதேசம் பெற்றது.

இதுகுறித்து மத்திய பிரதேச அமைச்சா் அன்சாரி விளக்கம் அளிக்கையில், ‘வக்ஃப் சொத்துகளை சிறப்பாக நிா்வகிப்பது, சிறப்பாக பராமரிப்பதை உறுதி செய்யும் நோக்கத்துடனே வக்ஃப் (திருத்த) சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. அதை மாநிலங்கள் அமல்படுத்த வேண்டியது கட்டாயம் ஆகும். அந்தப் புதிய சட்டத்தின்படி, (மத்திய பிரதேசத்தில்) மாற்றியமைக்கப்பட்ட வக்ஃப் வாரியத்தில் பாஸ்மன்டா முஸ்லிம்கள், பெண்கள், முஸ்லிம் மதத்தின் பல்வேறு பிரிவினா், முஸ்லிம் அல்லாத மதத்தினா் ஆகியோருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நமது நாடு அனைவருக்கும் சொந்தமானது. அனைத்து மதத்தினரும், இங்கு சரிக்கு சமமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ்கின்றனா்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.