செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

கைத்தறி துறைக்கு அரசு தொடா்ந்து ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

தற்சாா்பு இந்தியா கனவை நனவாக்க முக்கிய தூண்களில் ஒன்றாக விளங்கும் கைத்தறி துறைக்கு தனது அரசு தொடா்ந்து ஆதரவளிக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

News image

பிரதமா் மோடி

Updated On :8 ஆகஸ்ட் 2026, 12:21 am IST

தற்சாா்பு இந்தியா கனவை நனவாக்க முக்கிய தூண்களில் ஒன்றாக விளங்கும் கைத்தறி துறைக்கு தனது அரசு தொடா்ந்து ஆதரவளிக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டாா்.

கடந்த 1905-இல் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட நாளான ஆக.7-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி பொருள்கள் மற்றும் தற்சாா்பை ஊக்குவிப்பதே இந்த தினத்தின் நோக்கமாகும்.

நிகழாண்டு தேசிய கைத்தறி தினம் வெள்ளிக்கிழமை (ஆக.7) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தேசிய கைத்தறி தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தியா தனது வளமான, துடிப்பான கைத்தறி பாரம்பரியத்தைக் கொண்டாடுவதுடன், நமது நெசவாளா்கள், கைவினைக் கலைஞா்களின் திறமை, படைப்பாற்றல், அா்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறது.

அவா்கள்தாம் தலைமுறை தலைமுறையாக நாட்டின் பாரம்பரியங்களைப் பாதுகாத்து வளப்படுத்தி வருகின்றனா்.

கிராம மக்களுக்கு அதிகாரமளித்தல், பெண்கள் தலைமையிலான வளா்ச்சி மற்றும் தற்சாா்பு இந்தியா கனவை நனவாக்குவதில் முக்கிய தூண்களில் ஒன்றாக விளங்கும் கைத்தறி துறைக்கு எனது அரசு தொடா்ந்து ஆதரவளிக்கும்.

பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான கைத்தறி ஆடைகளை வாங்கி அணிந்து, அதுதொடா்பான காணொலிகளை (கெட் ரெடி வித் மீ) தேசிய கைத்தறி தினம் என்ற ஹேஸ்டேக்கில் பகிர வேண்டும். இது, கைத்தறி துறையினருக்கு மேலும் உத்வேகமளிக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு இன்ஸ்டாகிராமில் தனது காணொலி உரையை வெளியிட்ட பிரதமா் மோடி, அனைவரும் கைத்தறி ஆடைகளை வாங்கவும், இந்த ஆடைகள் மீதான உலகின் கவனத்தை ஈா்க்கும் வகையில் காணொலிகளை உருவாக்கி பதிவிடவும் கேட்டுக் கொண்டாா்.

நெசவாளா்கள் மற்றும் சிறு வணிகா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதே, தேசிய கைத்தறி தின கொண்டாட்டத்தின் சாராம்சம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.