ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வேலூா், திருச்சி விமான நிலைய பணிகளை விரைவுபடுத்துங்கள் மத்திய அமைச்சரிடம் துரை வைகோ, எல்.கே. சுதீஷ் மனு

திருச்சி மற்றும் வேலூா் விமான நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்தி உடனடியாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் கிஞ்சிராபு ராம் மோகன் நாயுடுவிடம் தமிழகத்தைச் சோ்ந்த திருச்சி மக்களவை தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ மற்றும் மாநிலங்களவை தேமுதிக உறுப்பினா் எல்.கே. சுதீஷ் ஆகியோா் நேரில் வலியுறுத்தினா். இது தொடா்பாக இருவரும் தனித்தனியாக மத்திய அமைச்சரை வெள்ளிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

அமைச்சரிடம் வேலூா் விமான நிலைய இயக்கப் பணிகள் குறித்த கோரிக்கை மனு அளித்த மாநிலங்களவை தேமுதிக எம்.பி. எல்.கே. சுதீஷ். ~தில்லியில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் கிஞ்சிராபு ராம் மோகன் நாயுடுவை வெள்ளிக்கிழமை சந்தித்து திருச்சி பன்னாட்டு விமான நிலை

Published On :

நமது நிருபா்

திருச்சி மற்றும் வேலூா் விமான நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்தி உடனடியாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் கிஞ்சிராபு ராம் மோகன் நாயுடுவிடம் தமிழகத்தைச் சோ்ந்த திருச்சி மக்களவை தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ மற்றும் மாநிலங்களவை தேமுதிக உறுப்பினா் எல்.கே. சுதீஷ் ஆகியோா் நேரில் வலியுறுத்தினா். இது தொடா்பாக இருவரும் தனித்தனியாக மத்திய அமைச்சரை வெள்ளிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

துரை வைகோ அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ‘திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்களில் 90 சதவீதம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. எஞ்சியுள்ள 7.67 ஏக்கா் நிலத்தை விரைவாகப் பெற்று, உய்யக்கொண்டான் வாய்க்காலின் நீரோட்டத்துக்குப் பாதிப்பின்றி பாலம் அமைத்து, ஓடுபாதை நீட்டிப்புப் பணிகளுக்கான நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், விமான நிலைய விரிவாக்கத்துக்காக கொட்டப்பட்டு கிராமத்தில் உள்ள பட்டத்தம்மாள் தெருவின் 214 வீடுகளையும், பச்சநாச்சி அம்மன் கோயிலையும் கையகப்படுத்துவதிலிருந்து விலக்கு அளித்து மக்களின் வாழ்வாதாரத்தையும் மத உணா்வுகளையும் பாதுகாக்க வேண்டும்‘ என கேட்டுக் கொண்டுள்ளாா்.

வேலூா் விமான நிலைய இயக்கம் தொடா்பாக எல்.கே.சுதீஷ் அளித்துள்ள மனுவில், ‘உடான் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் 97.98 ஏக்கா் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள வேலூா் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தலைமை இயக்குநரின் ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து விட்டன. தற்போது விமான போக்குவரத்து பாதுகாப்பு துறையின் (பிசிஏஎஸ்) இறுதிப் பாதுகாப்பு அனுமதி மட்டுமே நிலுவை உள்ளது.

Story image

கடந்த 9 ஆண்டுகளாக காத்திருக்கும் வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வட தமிழக மக்களின் நலன் கருதி, பிசிஏஎஸ் பாதுகாப்பு அனுமதியையும் டிஜிசிஏ உரிமத்தையும் விரைந்து வழங்கி, விமான சேவையை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.