வங்கதேசம் உள்பட சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் காண மாநில அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இந்த பிரச்னையைக் கையாளுவதில் எந்த சமரசமும் இருக்காது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங் கார்கே தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சட்ட விரோதமாக குடியேறியவர்களைத் தேடுதல், சரிபார்ப்பு போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
குடிமக்கள் தாங்களாகவே சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட முயல்வது மற்றும் சமூக ஊடகச் செயல்பாட்டாளராகச் செயல்படுவதும் கூடாது. இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
கடந்த மூன்று மாதங்களில் அரசு கிட்டத்தட்ட 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு நகர காவல்துறை பல்வேறு குடிசைப் பகுதிகளில் சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கையைத் தொடங்கியுள்ள நிலையில், இதுவரை 40-க்கும் மேற்பட்ட வங்கதேச நாட்டினர் பிடிபட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஆப்பிரிக்கர்கள், வங்கதேச நாட்டினர் மற்றும் பிறரும் அடங்குவார்கள். அவர்களில் பலர் வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள். ஆகவே, இதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை.
எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் அரசு தொடர்பில் இருக்கின்றது. மேலும், தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறோம்.
நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். தேவைப்பட்டால், இதற்காக ஒரு சிறப்பு அணியையும் அமைப்போம். வங்க தேசம் அல்லது வேறு எந்த நாட்டுடனும் கர்நாடக சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்ளாததால், மத்திய அரசு கர்நாடகத்திற்கு உதவ வேண்டும்.
சட்டவிரோத குடியேறிகள் குறித்த தகவல்கள் தெரிந்தால், மக்கள் தாங்களாகவே விஷயங்களைக் கையில் எடுக்காமல், அதை காவல்துறையிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். காவல்துறை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கார்கே வலியுறுத்தினார்.
Karnataka Home Minister Priyank Kharge on Saturday said the state government was taking stringent and sustained action to identify illegal immigrants, including those from Bangladesh, and warned that there would be no compromise on tackling the issue.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு கரையில் மசூதிகளுக்குத் தீவைப்பு

வங்கதேசத்தினர் பெங்களூருக்கு எப்படி வருகிறார்கள்? பிரியங்க் கார்கே

மேக்கேதாட்டு விவகாரத்தில் கருத்துகள் முக்கியமில்லை! தமிழக காங்கிரஸ் எதிர்ப்புக்கு கர்நாடக அமைச்சர் பதில்!

எஸ்ஐஆருக்கு எதிர்ப்பு இல்லை; ஆனால் காங்கிரஸின் கேள்விகளுக்கு பதில் வேண்டும்: பிரியங்க் கார்கே
விடியோக்கள்

காவிரி பிரச்னையை திசைதிருப்பவா Delimitation? - அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி




