உத்தர பிரதேசத்தில் நாய் குரைத்ததால் ஆத்திரமைடைந்த நபர் அதனைச் சுட்டுக்கொன்றார்.
உத்தர பிரதேச மாநிலம், அலிகரில் உள்ள போஜ்பூர் கிராமத்தில் விஸ்வஜித் (45) தனது இருசக்கர வாகனத்தில் பண்ணை வீட்டை நோக்கிச் சென்றிருக்கிறார். அப்போது, ஹரிஓம் சர்மா என்பவரது வீட்டைக் கடந்து அவர் சென்றுள்ளார். இந்த நிலையில் அந்த வீட்டின் செல்லப்பிராணி நாய் அவரைப் பார்த்துக் குரைத்திருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த விஸ்வஜித் கெட்ட வார்த்தைகளால் திட்டியதோடு மிகவும் ஆத்திமடைந்தார். பிறகு தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து நாயை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் அந்த நாய் சம்பவ இடத்திலேயே பலியானது. துப்பாக்கிச் சூடு சப்தத்தைக் கேட்டு வெளியே வந்த ஹரிஓமின் 23 வயது மகன் விகாஸ், நாய் கொல்லப்பட்டது குறித்து விஸ்வஜித்திடம் கேட்டுள்ளார்.
உடனே விகாஸையும் விஸ்வஜித் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஸ்வஜித் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த விகாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச் சூடு குறித்துத் தகவல் அறிந்த ஹர்துவாகஞ்ச் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதோடு தப்பியோடி குற்றவாளியையும் அவர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனிடையே சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் ஆய்வாளர் யோகேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
Summary
Aligarh: Upset with constant barking, a man shot dead a dog in an Aligarh village.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடும் வெய்யில்! சூட்டைத் தணிக்க நாய் இறைச்சி சூப்... வடகொரியா பரிந்துரை!

மிக விரைவாக 1 பில்லியன் டாலரை வசூலித்த ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!

கேரளத்தில் அமீபா மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK




